கொடைக்கானல் அருகே பார்பிக்யூ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் ஜெயக்கண்ணன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டு சமைத்துள்ளனர்.

அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்க சென்றனர். மற்றொரு அறையில் இருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பிய போது இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.