
உலகில் மிக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கக்கூடிய எம்வி கங்கா விலாஸ் சொகுசுப்படகு சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவங்கி வைத்துள்ளார். நாட்டின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நதி வழியே பயணிக்கும் விதமாக, இந்த சொகுசுப் படகின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
வாராணசியில் இருந்து சுமார் 51 நாட்களுக்கு 3,200 கி.மீ தொலைவுக்கு பயணித்து வங்கதேசம் வழியே அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதிக்கு செல்லும் இப்படகில் பயணிக்க நாளொன்றுக்கு ஒரு பயணிக்கு ரூ.25,000 -ரூ.50,000 வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சொகுசுப் படகு நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு செல்லும் அடிப்படையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சொகுசுப் படகில் ஏறி 51 நாட்கள் ஒருவர் பயணிக்க வேண்டுமெனில் ரூ.20 லட்சம் கட்டணம் செலுத்தவேண்டும்.