
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது கடந்த அக்டோபர் மாதம் வரை பத்திரப்பதிவுத்துறையில் 16 ஆயிரத்து 733 கோடி ரூபாய் வருவாய் இருப்பதாக கூறியுள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறியதாவது, 2023- 24 ஆம் நிதி ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 10 ஆயிரத்து 511 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அந்த வருவாயை விட 2024-25 நிதியாண்டில் அக்டோபர் வரை கூடுதலாக 1222 கோடி கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.