
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய வருமான ஆதாரம் அவரின் பிராண்ட் எண்டோர்ஸ்மென்ட்களே. ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் பணம் ஈட்டும் அவர், சமீபகாலமாக அவருடைய கிரிக்கெட் ஆட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அவரின் பிராண்ட் மதிப்பில் எந்தவிதமான குறைபாடும் ஏற்படவில்லை. 2017ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனமான புமாஎன்பவருடன் ரூ.110 கோடியுடன் 8 வருட ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தம் இப்போது முடிவடைந்த நிலையில், புமா மீண்டும் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பிய போதிலும், விராட் கோலி அதை நிராகரித்துள்ளார்.
அதற்கு முக்கியக் காரணமாக, விராட் கோலி தனது தனிப்பட்ட பிராண்டான One8 ஐ மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் தான் அதை புறக்கணித்துள்ளார். புமாவின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் அபிஷேக் கங்குலி தொடங்கிய ‘Agilitas’ என்ற நிறுவனத்துடன் விராட் கோலி பிசினஸ் செய்வதற்கான திட்டத்தில் இருக்கிறார். IPL தொடரின் நடுவில் விராட் கோலி இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். Agilitas நிறுவனம் One8 பிராண்டை விரிவாக்கம் செய்வதுடன், அதன் கடைகளை மேலும் திறக்கவும், சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1046 கோடியாகும். அவர் ஒரு பிராண்டு விளம்பரத்துக்காக ரூ.5 முதல் 10 கோடி வரை வாங்குகிறார்.