சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியல் நேற்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அரையிறுதியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியுடன், போட்டியில் ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு, அணியின் தற்காலிக கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஸ்டீவ் ஸ்மித் தனது தலைமுறையின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையால்  ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளார்.

அதாவது ஸ்டீவ் ஸ்மித்தின் நிகர மதிப்பு கோடிகளில் உள்ளது. இது கிரிக்கெட், விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் அவர் ஈட்டிய வருமானத்தின் விளைவாகும். ஸ்டீவ் ஸ்மித்தின் நிகர மதிப்பு 2025 ஆம் ஆண்டு நிலவரப்படிசுமார் ரூ. 250 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.   இவர் ஆண்டுதோறும் நல்ல தொகையை சம்பாதிக்கிறார். இது தவிர, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான போட்டிக் கட்டணத்தையும் அவர் பெறுகிறார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டிக்கு ரூ. 16 லட்சம் வாங்குகிறார்.  ஒருநாள் போட்டியில்  ஒரு போட்டிக்கு ரூ. 4 லட்சம் வாங்குகிறார்.  ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பிற அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவர் ஐபிஎல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.