ஆந்திர மாநிலத்தில் சிங்கிபுரம் என்ற கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன் தாயிடம் ஓய்வூதிய பணத்தை கேட்டுள்ளார். அதாவது மது குடிப்பதற்காக அவர் தனது அம்மாவிடம் பணம் கேட்ட நிலையில் அவர் கொடுக்க மறுத்ததால் தன் தாயை பயமுறுத்த நினைத்தார்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி மின் வயரில் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் கீழே இறங்கி வந்தார். மேலும் குடிபோதையில் அந்த வாலிபர் மின் கம்பத்தில் ஏறி படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.