தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் சமீப காலமாக இவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது ரோபோ சங்கரின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் உடல் எடை குறைந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு ரோபோ சங்கர் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னேற்ற நேற்று புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் உடல் எடை மிகவும் குறைந்து மெலிந்த நிலையில் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.