இந்த டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பண பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பெரிதும் உதவுகின்றன. அதில் கூகுள் பே செயலியும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கூகுள் பே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யும் வகையில் சர்வதேச அளவில் UPI சேவையை வழங்குவதற்கு google pay செயலி முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூர் ஆஸ்திரேலியா ஓமன் உள்ளிட்ட யுபிஐ சேவை நடைமுறையில் உள்ள நாடுகளில் கூகுள் பே தனது சேவையை தொடங்க இருக்கிறது.