
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வாகா எல்லையில் இந்திய பெண் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்துடன் சேர வேண்டும் என கண்ணீருடன் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள விதிமுறைகளுக்கு நடுவே சிக்கி உள்ள பெண் கூறியதாவது,
“நான் ஒரு இந்திய குடியுரிமை உடையவள். 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் நாட்டில் திருமணம் ஆனேன்,” என தனது குரல் நடுங்கக் கூறினார். “என் 2 குழந்தைகளும் இந்தியாவில் பிறந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்,” என்றார்.
VIDEO | Punjab: Visuals from the Attari-Wagah border. “I am an Indian citizen who got married in Pakistan 10 years ago. Both of my children were born in India,… pic.twitter.com/cNAw9P3gml
— Press Trust of India (@PTI_News) April 25, 2025
மேலும் தற்போதைய எல்லை விதிமுறைகளின்படி பச்சை பாஸ்போர்ட் (பாகிஸ்தான் பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்களை மட்டுமே எல்லை தாண்ட அனுமதிக்கின்றனர். இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் எனக்கு தன் குழந்தைகளுடன் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
“என் நிலையை கருணையுடன் புரிந்து கொண்டு, எல்லையை கடக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்,” என அவருடைய மனமுடைந்த மனநிலையில் கண்ணீர் விட்டு அரசு முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களை பரவி இரு நாட்டின் விதிமுறைகளால் தன் குழந்தைகளை தாண்டி செல்ல முடியாமல் நிற்கும் ஒரு தாயின் துயரமான சம்பவத்தை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.