
அரசாங்கம் தங்கநகைகளை விற்பனை செய்வதற்கும், தங்கநகைகளை வாங்குவதற்கும் புது விதிகளை வகுத்துள்ளது. அதாவது, அடையாளமில்லா தங்கநகைகளை வாங்கு மற்றும் விற்க அரசானது தடைவிதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ (அ) உடைக்கவோ புது தங்கநகைகளை உருவாக்கவோ (அ) மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வீட்டிலுள்ள பழைய நகைகளை விற்க (அ) உடைத்து புது நகைகள் செய்ய நினைப்பவர்களுக்கு இச்செய்தியானது முக்கியமானதாக இருக்கும்.
அரசாங்கம் நகை விற்பனைக்கு புது விதிமுறைகளை வகுத்திருப்பதால், ஹால்மார்க் கிடைக்கும் வரையிலும் வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளை உங்களால் விற்கமுடியாது. தங்கநகைகளை வாங்குவது மற்றும் விற்பதற்கான தங்க ஹால்மார்கிங்க் பற்றி அரசு புது விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த புது விதிகளின் படி, இப்போது வீடுகளில் வைத்துள்ள பழைய தங்கநகைகளுக்கும் ஹால்மார்க் போடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1, 2023 முதல் அனைத்து தங்கநகைகள் மற்றும் கலைப் பொருட்கள் ஹால்மார்க் தனித்துவ அடையாள (HUID) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும் என புது விதிகள் தெரிவிக்கிறது. எனினும் புது நகைகள் (அ) தங்கப்பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே ஹால்மார்க்கிங் பொருந்தும் என மக்கள் நம்பி வந்த சூழலில், தற்போது இந்த ஹால்மார்கிங் நகைகளை விற்பதற்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.