தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” எனும் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என கூறப்படுகிறது. எனினும் இப்படத்தின் சூட்டிங் இன்னும் தொடங்காமல் இருக்கிறது. இதற்கிடையில் அஜித்தின் மனைவி ஷாலினி இப்போது இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி அதில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அவர் அவ்வப்போது அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது ஷாலினி தன் கணவருடன் ஐரோப்பியாவில் காரில் பயணம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் “உயிரும் நீயே உறவும் நீயே” என்ற பாடலை கேட்டுக்கொண்டு அஜித் கார் ஓட்டிச் செல்கிறார். அது அஜித்துக்கு பிடித்த பாடல் என ஷாலினி பதிவிட்டுள்ளார். அப்பாடல் அஜித் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகிய “பவித்ரா” படத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.