
பொள்ளாச்சியில் திட்ட பணிகளை தொடங்கிய பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத மோடியின் உத்திரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் மற்றும் டிவியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழகத்திற்கு கொண்டு வருகின்ற திட்டங்களை திமுக தடுக்கிறது என பிரதமர் மோடி கூறுகிறார். அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை நாம் சென்று தடுக்கின்றோமா! நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு சொல்வார்கள் -அது மாதிரி இது மோடி புழுகு? அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.