நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது பின்னாலேயே வெற்றி மிதுனும் சென்றுள்ளான்.

இந்த நிலையில் வெற்றி மிதுன் நிற்பதை பார்க்காத தான் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சக்கரத்தில் சிக்கி வெற்றி மிதுன் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி உடனடியாக தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வெற்றி மிதுன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பிரியதர்ஷினி கதறி அழுதார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுனர் இராமலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.