அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க நிதி நிறுவனமானது உலகில் உள்ள பெரும் நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறை கேடுகள் குறித்து ஆய்வு செய்த அறிக்கை வெளியிடும். அந்த வகையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமம் பெரிய அளவில் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் மிகப் பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று ஹிண்டன்பர்க் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது அதானி குழுமத்தின் வெளிநாட்டு பங்குமுறைகேடுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் செபி நிறுவனத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

அதாவது இந்திய பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் மற்றும்  அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் பற்றி சில அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளது. அதாவது வினோத் அதானி பெர்முடா மற்றும் மொரிசியஸ் நிறுவனங்களில் உள்ள பங்குகளில் முறைக்கேடு செய்ததாக அந்நிறுவனம் கூறிய நிலையில், இதே நிறுவனங்களில் செபி தலைவருக்கும் அவருடைய கணவருக்கும் பங்குகள் இருப்பதாகவும் அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து முதன்முதலாக முதலீட்டை தொடங்கினார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குமுறை கேடுகள் குறித்து விசாரிக்க தயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார் செபி தலைவர். அதோடு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் தற்போது ‌ protect mode-ல் இயங்கி வருகிறது.