திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை வருவாய்த்துறையினர் அகற்ற முயற்சித்த போது இளைஞர் ஒருவர் அதிகாரிகள் முன்பு தீக்குளித்தார்.

அப்போது இளைஞரின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் காவலர்கள் அந்த இளைஞரை மீட்டனர். உடனே அவரை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிடைத்து உள்ளது.