திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அரசு பேருந்தும் காரும் மோதி கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது சோமாசி பாடி அருகே காட்டுக்குளம் பகுதியில் நள்ளிரவு 3:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.