
தமிழக முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்ற நிலையில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த தேர்தலை அதிமுக படுதல்வியை சந்தித்ததோடு பாஜக கட்சி பாதாளத்தில் விழுந்தது. தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிந்ததால் தான் அதிமுக போட்டியிடவில்லை. இதேபோன்று பாஜக கூட்டணியில் உள்ள பாமக இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் எனக் கூறிவந்த நிலையில் அவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டதற்கான மர்மமும் விலகவில்லை. பாஜக அணி பல பொய்களை அவதூறுகளையும் பரப்பிய நிலையில் அதற்கெல்லாம் தற்போது விக்கிரவாண்டி தொகுதி மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது!
விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும் – உழைத்த அனைவருக்கும் நன்றி!
– மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் அறிக்கை.#DMK4TN #DMKWins 🌄 pic.twitter.com/NSF48Mc9Se
— DMK (@arivalayam) July 13, 2024