
விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல் நடக்கப்போவது இதுதான் முதல் முறை.
இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி போவதன் மூலமாக பாஜக தான் எதிர்க்கட்சி என்ற பிம்பம் உருவாகும் என்று கூறியிருக்கிறார். இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.