
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தவெக என ஐந்து முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.