நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மறைந்த விஜயகாந்த் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என்று கேள்விகள் இருந்த நிலையில் அந்த கட்சியின் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூறி இருந்தனர். இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசியதாகவும் 10 தொகுதிகள் தேமுதிக கேட்டதாகவும் ஐந்து தொகுதிகள் கொடுக்கிறோம் என்று அதிமுக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.