
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேற்று காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சண்முகம். இதனால் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்ட நிலையில் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் தான் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இதனை இந்தியா கூட்டணி உணர்ந்து மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருப்பது போன்று மற்ற மாநிலங்களில் இல்லை. இந்தியா கூட்டணி வலுப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான முயற்சிகளை செய்யும் என்றார்.
அதன் பிறகு தமிழக அரசியலில் பல பிரபலங்கள் வந்து சென்றுள்ளனர். நடிகர் விஜய்யை அதிமுக மற்றும் திமுக கட்சியை விரும்பாதவர்கள் ஆதரிக்கலாம்.
ஆனால் அதிமுக மற்றும் திமுகவுக்கு பதில் விஜய் வருவார் என்று கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் பாஜகவையும் திமுகவையும் விமர்சித்து வருகிறார். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் வருகை திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று கூறப்படும் நிலையில் தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு பதில் தமிழக வெற்றிக்கழகம் வரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சண்முகம் கூறியுள்ளார். முன்னதாக சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக பொறுப்பேற்றுதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.