
அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது. ஒருவேளை அதிமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்ததை போன்று நடந்தாலும் அதிமுக தனித்து மட்டும்தான் ஆட்சி அமைக்குமே தவிர பாஜகவுடன் இணைந்த கூட்டணி அரசு அமைக்காது. கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றாலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காது என்று கூறினார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று கூட்டணி ஆட்சி மட்டும்தான் கூட்டணி அரசு அமைக்கப்படாது என்று கூறினார். அதன்பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் பாஜக மற்றும் அதிமுக இணைந்த ஆட்சி அமைக்கும் என்று கூறிய நிலையில் தற்போது அதிமுக தலைவர்கள் பலரும் அதற்கு வாய்ப்பில்லை என்று மறுக்கிறார்கள்..