தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் ஜெய் பீம் படத்தில் நடித்த பிறகுதான் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை தொடர்ந்து குட் நைட் மற்றும் லவ்வர் படங்களும் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படி அடுத்தடுத்து தன்னுடைய இயல்பான நடிப்பை கொடுத்து வந்த மணிகண்டன் 2025 ஆம் வருடம் குடும்பஸ்தன் படத்தில் நடித்து வெற்றியை கொடுத்துள்ளார் .

இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. உலக அளவில் 35 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது திரையரங்கில் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது ஓடிடியில் வெளியான இந்த படம் அங்கும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.