நியூசிலாந்தின் வடமேற்கு கடற்கரையில் தலை இல்லாத உடல் நிர்வாணமாக கிடப்பதாக போலீசாருக்கு பெண் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினருக்கு அதன் உண்மை நிலவரம் தெரியவந்தது  தெரியவந்தது.

அந்த பொம்மையின் நகங்கள் பெண்ணின் நகம் போல வண்ணம் திட்டப்படிருந்தது. மேலும் கால்களின் விரல்கள் பிரிந்திருந்தன. இதனால் அச்சு அசலாக உண்மையான உடல் போன்று தோன்றியதால் பயந்துபோன அந்த பெண் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

சற்று அருகில் சென்று பார்த்திருந்தால் அது பொம்மைதான் என்பது தெரிந்திருக்கும் இருப்பினும் தலையும் இல்லாமால் கிடந்ததால் பயந்து போன அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அது பொம்மைதான் பயப்பட தேவை இல்லை என்று மக்களின் அச்சத்தை போக்கினர். பின்னர் அந்த பொம்மையை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்

இருப்பினும் இந்த பொம்மை எப்படி கடற்கரைக்கு வந்தது என்பது தெரியவில்லை. இதுபோன்ற பொம்மைகளின் விலை பல ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.