சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக ஜெயஸ்ரீ என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜெய் ஸ்ரீ, காவலர் நித்தியா ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறு நாகூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நித்யாவை வீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யாவும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.