
நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு பெண் பிரேக்கப் செய்த தனது காதலனை பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளார். அவர் தனது காதலனுக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அவரது முன்னாள் காதலனும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து அந்த சூப்பை குடித்துள்ளார். இதனால் ஐந்து பேரும் உயிரிழந்தனர். உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் விசாரணையை முதலில் தொடங்கினர். அதன்பிறகு தான் உண்மை தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.