தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இன்று கடிதம் ஒன்றை கைப்பட எழுதியிருந்தார். அந்த கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் வழங்கி வந்தனர். இந்த நிலையில் சென்னை பூக்கடை பகுதியில் தனியார் கல்லூரியில் விஜய் எழுதிய கடிதத்தை விநியோகம் செய்துள்ளனர்.

அப்போது போலீசார் கடிதத்தை கொடுக்கக் கூடாது என தடுத்ததாக தெரிகிறது. அதனை மீறியும் தமிழக வெற்றி கழகத்தினர் அதனை விநியோகம் செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை தி நகரில் புஸ்ஸி ஆனந்த் கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தினர் வழங்கியதை பார்க்க சென்றார். அப்போது அனுமதி இன்றி நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.