
சேலம் மாவட்டம் செவ்வாபேட்டையை சேர்ந்தவர் வித்யா. இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் வித்யாவிடம் பணம் திரும்ப கேட்டனர். ஆனால் வித்யா பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வித்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.