திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு பாலாஜி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகனுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சிங்காரப்பேட்டைக்கு சென்றுள்ளார். அங்கு அனைத்து பொருட்களையும் வாங்கிவிட்டு மகனூர்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் புரோட்டா மற்றும் சிக்கன் குழம்பை பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் ராஜேஸ்வரிக்கும் பாலாஜிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பரோட்டா சாப்பிட்டு தான் பாலாஜி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.