
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த நபரை தடுக்கும் நோக்கில் மாணவி அவரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவியின் ஆடைகளை கிழித்து எறிந்து அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்னால் நின்று உதவி கோரிய மாணவி, தனது ஸ்மார்ட்போனில் தனது நண்பர்களுக்கு அவசர செய்தி அனுப்பி உதவி கோரியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின் அப்பகுதியில் அந்த நபரை தேடி அலையும் போது அரை நிர்வாண நிலையில் ஒரு நபரை கண்டதும் அவரை பிடிக்க முயன்ற போது அவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து cctv கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் பெங்களுருவில் ஆடு கோடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த முகேஸ்வரன் என்ற முகேஷ் ஆன 24 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய முகேஷ் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் 2003 ஆண்டு முதல் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகேஷ் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மற்றும் நடன கலைஞர் ஆக இருந்துவருகிறார். இந்நிலையில் இவர் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.