
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் லிங்கம்(37). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பானுமதி(33). குழந்தை விஷாலினி (9). பிறவியிலேயே குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி குழந்தையாகவே பிறந்ததால் இருவருக்கும் வளர்ப்பதற்கு சிரமமாக இருந்தது.
இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். மேலும் குழந்தை வளர்ந்த பிறகு பூப்பெய்தினால் பராமரிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என கருதிய தம்பதியினர் நேற்று முன்தினம் விஷானிக்கு விஷம் கொடுத்துவிட்டு அவர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் தம்பதியினர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.