பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹாரூனுக்கு ரேஹானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். வறுமையால் அந்த கடன் தொகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் இருக்கின்றனர்.

இவர்கள் ஆரிப் என்பவரிடம் தங்களது ஒன்றரை வயது குழந்தை குர்பானை 9000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்திய போது ரேஹானா தனியார் நிறுவன முகவர்கள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் எங்கள் மீது வழக்கு தொடர்வோம் என கூறினார்கள். கடனை அடைக்க குழந்தையை விற்கும்படி என் அண்ணன் தன்வீர் கூறியதால் குழந்தையை விற்க முடிவு செய்தோம் என கூறினார்.

அதன்படி ஒன்றரை வயது குழந்தையான குர்பானை ரேஹானாவின் சகோதரர் தன்வீர் 9000 ரூபாய்க்கு ஆரிப் என்பவரிடம் விற்று உள்ளார். அந்த குழந்தைக்கு அரீப்பின் உறவினர் 45 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆரீப்பிடமிருந்து தன்வீர் எவ்வளவு பணம் பெற்றார் என்பது ரேஹானாவுக்குவுக்கு தெரியவில்லை.

குழந்தையை விற்கும்படி தன்வீர் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையை இரண்டு லட்ச ரூபாய்க்கு பெங்களூரில் இருக்கும் ஒருவரிடம் விலை பேசி விற்க முடிவு செய்தனர். முன்னதாக தகவல் அறிந்து போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் போலீஸ் கட்டுபாட்டில் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.