கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் சென்ற நிலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த பைக் ஒன்று வாலிபர்கள் சென்ற பைக்கின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் வாலிபர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று வாலிபர்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வாலிபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக பொறையார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகிறார்கள்.