கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மாணவியை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றார். அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 17 வயது மாணவனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவி தன்னை கிண்டல் செய்து, தன்னை பற்றி பள்ளியில் அவதூறான கருத்துக்களை பரப்பியதால் பரிசு கொடுப்பதாக கூறி தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்ததாக மாணவர்  கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்