திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் காவேரி செல்வி(24) கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர் இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப் படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் செல்வி வேலை முடிந்து தெற்கு காவலர் குடியிருப்பு வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செல்வி தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசார் செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் செல்வி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.