
சென்னை எழும்பூரில் இருந்து தினந்தோறும் காலை விருதாச்சலம் வழியாக சேலத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சென்னையில் இருந்து சேலம் நோக்கி ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் படுத்திருந்ததை ரயில் ஓட்டுநர் பார்த்தார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்டு ஓட்டுனர் ரயிலின் வேகத்தை குறைத்து ரயிலை நிறுத்தினார். பின்னர் தண்டவாளத்தில் இருந்த மூதாட்டியை அப்புறப்படுத்தியதோடு உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசாரும், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் மூதாட்டியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.