கேரளாவில் சாலை வளைவில் யானை இருப்பது தெரியாமல் பைக்கில் சென்று அதன் மீது மோதிய இளைஞரை அந்த யானை தாக்கி கொன்றது

புதுக்காடு எஸ்டேட்டை சேர்ந்த முகேஷ்(21) என்ற வாலிபர் சோலையார் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பினார். முகேஷ் அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது அங்குள்ள எஸ் வளைவில் யானை நின்றது. இதனை அறியாமல் முகேஷ் வேகமாக சென்று அந்த யானை மீது மோதி கீழே விழுந்து விட்டார்.

இதனால் கோபமடைந்த யானை முகேஷை தாக்கி கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.