லாரி மீது பேருந்து மோதி விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கருகம்புதூர் என்ற ஊர் இருக்கிறது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. அதே சமயம் குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பேருந்து பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அதிவேகமாக வந்த பேருந்து எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.