இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமணம் வருகின்ற மே 28 முதல் 30-ம் தேதி வரை பிரம்மாண்டமாக கப்பலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தரையில் நடக்காமல் சொகுசு கப்பலில் வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கப்பலில் வேலை செய்ய சுமார் 600 ஊழியர்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த திருமணத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்ட கப்பல் சுமார் 4,350 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் நடந்த திருமண வைபோக விழாவில் விருந்துக்கு மட்டும் சுமார் 300 கோடி அளவில் செலவு செய்யப்பட்ட நிலையில் திருமண வைபோகத்திற்கு 1200 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.