தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அவர் பல இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் அரசியல் பேசியிருந்தார். அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பிகில் பட ஆடியோ லான்ச் அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் சர்ச்சையாகவும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என கூறப்பட்ட இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில்  ஒன்று சர்க்கார்.

மற்றொன்று லியோ படத்தின் சக்சஸ் மீட் ஆகியவை அமைந்திருந்தது. இந்நிலையில் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வீடியோ காட்சிகள் எடிட் செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது. அதில் புழுக்கம் ஏற்பட்டால் மழை வருவது போல, ரொம்ப நெருக்கடியான சூழ்நிலையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி ஒருவன் வருவான். அவன் தலைவனாக மாறுவான். அவனுக்கு கீழ் அமையும் ஒரு சர்க்கார் இருக்கு பாருங்க என பேசி இருப்பார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.