சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிலையில் அவர் மகளிர் எழுச்சி என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது டிஜிட்டல் புரட்சி நடக்கிறது. இதனால் ஜிஎஸ்டி வரிகள் உட்பட அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.

இந்தியாவில் நடக்கும் டிஜிட்டல் புரட்சியை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்படுகிறது. என்னை பார்த்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருந்தவர் நிதியமைச்சர் ஆக மாறிவிட்டார் என்று கூறுவார்கள். என்னை ஊறுகாய் போடுபவர் என்று விமர்சிப்பதை ‌ நினைத்து நான் கவலைப்படுவது கிடையாது. என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவது ஒரு இழிவான வேலை கிடையாது. மேலும் மக்களுக்காக சேவை செய்வதும் இழிவானது கிடையாது என்று கூறினார்.