திண்டுக்கல்லில் இருக்கும் ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறி இரு தரப்பினர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை வேலுசாமியின் உறவினர் ராஜேஷ் என்பவருக்கு சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தரப்பினரும் ஆவணங்களுடன் வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு வாக்குவாதம் மோதலில் முடிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தும் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர். இந்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.