
ஜப்பான் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட ஒரு சிறுமியிடம் விசாரணை தொடங்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் வருகிறது. 17 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி 12 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் குதித்த போது கீழே நடந்து சென்ற சிக்காகோ ஷிபா(32) என்ற பெண் மீது விழுந்தார். இதனால் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணை கொன்றதாக உயிரிழந்த சிறுமியின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.