உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாஜக தலைவர்கள் ஷாஜகானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்டது என்ற கருத்தை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர். அதோடு கடந்த 2017 ல் ஆண்டிலிருந்து இது ஒரு இந்து கோயில் எனவும் தேஜோ மஹாலயா என்று பெயரிடப்பட்ட சிவன் கோயில் என்றும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அது இந்து ஆட்சியாளரால் முதலில் கட்டப்பட்டது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பெண் ஒருவர் கன்வாரை அவரது தோளில் சுமந்து கொண்டு தாஜ்மஹாலை பார்ப்பதற்கு வந்துள்ளார்‌. அதன்பின் அவர் தான் இந்து மகா சபாவின் மாவட்ட தலைவர் என கூறினார். பின்பு அந்த பெண் திடீரென தாஜ்மஹாலுக்குள் நுழைய பார்த்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது கனவில் சிவன் வந்ததாக கூறினார். பின்பு தாஜ்மஹாலுக்கு புனித நீரை தெளிக்க சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.