
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என்னுடைய தலையை இரண்டாக வெட்டுங்கள்.
மதத்தின் அடிப்படையில் நான் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. இதுவரைக்கும் நான் நல்லவன் என்று தான் பெயர் எடுத்து இருக்கிறேன். இனியும் அப்படித்தான் இருப்பேன், இது தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.