மதுரையில் டங்க்ஸன் துறைமுகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது தொடர்பாக ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது என்பது கூடவா எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது. சுரங்கம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசை ஒரு வார்த்தை கூட சொல்லாத எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் தலைவர் போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அவர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்பதை மறந்து தமிழக பாஜக தலைவர் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். தமிழ்நாடு நலனுக்காக எந்த குறளும் கொடுக்காமல் அரசியல ஆராயத்தை மற்றும் முதன்மையான நோக்கமாகக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார். மேலும் அவருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.