இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் மீண்டும் ஒன்று சேர வேண்டும். ராஜன் செல்லப்பா என்னை ஆறு மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார். அப்படி இருந்தால் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறி மீண்டும் அதிமுகவில் இணைப்பாராம். நான் யார் வீட்டு வாசலிலும் போய் நிற்கவில்லை. எனக்கு யாருடைய சிபாரிசும் தேவையும் இல்லை என்றார்.

அதன் பிறகு ஆர்பி உதயகுமார் என்ன நிலையில் அதிமுக கட்சியில் இருந்தார் என்பதை கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி டெபாசிட் இழந்ததற்கு அவர் மட்டும்தான் முழு காரண கர்த்தா. என்னைப் பற்றியோ என் குடும்பத்தை பற்றியோ பேசுவதை இதோடு ஆர்பி உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் இருமொழிக் கொள்கையை மட்டும் தான் பின்பற்றி வந்தார்கள். இருமொழிக் கொள்கை என்பது தமிழக மக்களின் உயிர் மூச்சு. மேலும் எனவே தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் எப்போதும் தொடரும் என்று கூறினார்.