
பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் கஜினி படம் தொடர்பாக முன்னதாக நடிகை நயன்தாரா கொடுத்த ஒரு பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகை நயன்தாரா கூறியதாவது, என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் மோசமான முடிவு கஜினி படத்தில் நடித்ததுதான். எனக்கு சொல்லப்பட்ட விதத்தில் என் கதாபாத்திரம் படத்தில் அமையவில்லை.
நான் சில இடங்களில் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இருப்பினும் அதைப் பற்றி புகார் அளிக்க விரும்பவில்லை. இதனை என்னுடைய வாழ்க்கையில் ஒரு அனுபவமாக கருதுகிறேன் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர் முருகதாஸும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், எனக்கு ஒருவரை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக அவரை படத்தில் மிகைப்படுத்தியோ அல்லது குறைவாகவோ காட்டமாட்டேன். சில சமயங்களில் நமக்கு பிடிக்காதவர்களுக்கு நல்ல கதாபாத்திரமும் பிடித்தவர்களுக்கு சிறிய கதாபாத்திரமும் அமையும். மேலும் இது நம்முடைய கைகளில் இல்லை என்று கூறியுள்ளார்