
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைப்பது நிச்சயமாகும். இதனால் இருவரின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியின் ஆதரவு தொடர்ந்து பாஜகவுக்கே நீடிக்கும் என தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் கனகமேடலா ரவீந்திரகுமார் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்தது நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால் ஆந்திராவின் நன்மைக்காக பாஜகவுக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும் என்று அவர் திட்டவட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கூறியுள்ளார்.