தெலுங்கானாவில் கோசம்பள்ளி கிராமத்தில் 65 வயதான அலுகுலா கங்காவ்வா என்ற பெண் வசித்து வந்தார். அவர் பல வருடங்கள் அங்கன்வாடி செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றிருந்தார். அவர் வசித்த வீடு பாம்புகளுக்கும் வாழிடமாக இருந்தது. அதாவது அந்த வீட்டில் பல பாம்புகளும் ஒரு நாகப்பாம்பும் இருந்தன. இத்தனை பாம்புகள் இருந்தும் அதை பார்த்து அந்தப் பெண் பயப்படவில்லை. மாறாக அவற்றுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

அத்துடன் நாகப்பாம்பை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளார். அருகில் உள்ள மக்கள் பலமுறை அவரிடம் வீட்டிலிருந்து பாம்புகளை அகற்றும்படி கூறியுள்ளனர். இல்லையெனில் உங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் அதற்கு மறுத்துவிட்டார். “பாம்பு தெய்வம் தன்னை காக்கும்” என்று அந்தப் பெண் கூறினார். அவர் தினமும் இந்த பாம்புகளை வழிபட்டு வந்தார்.

அதில் கொடிய விஷம் உடைய ஒரு நாகப்பாம்பும் இருந்தது. அந்தப் பெண் அதை “நாக தேவனின் அவதாரமாக” கருதினார். ஆனால் அந்தப் பாம்பு ஒரு நாள் தனது உயிரைப் பறிக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை..!!

இந்நிலையில் திடீரென ஒருநாள் அந்த பாம்பு அந்த பெண்ணை கடித்துவிட்டது … ஒருமுறை அல்ல பலமுறை கடித்துள்ளது. இதனால் உடம்பில் விஷம் ஏறி ..அவரது உடல்நிலை மோசமடைந்தபோதும் சிகிச்சை பெற அருகில் உள்ளவர்கள் அழைத்தும் மறுத்துவிட்ட பெண் அங்கேயே இறந்துவிட்டார்.